Home Featured உலகம் மத்திய ஜாவா வெள்ளம் – 31 பேர் மரணம்! 19 பேர் காணவில்லை!

மத்திய ஜாவா வெள்ளம் – 31 பேர் மரணம்! 19 பேர் காணவில்லை!

1081
0
SHARE
Ad

ஜாகர்த்தா – இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவுப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

indonesia-java-ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் வேளையில், மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சில இடங்களில் ஏற்பட்ட மோசமான நில சரிவுகளினால் பலர் சிக்குண்டு மரணமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice