Home Featured தமிழ் நாடு கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா, ஸ்டாலின் காரசார விவாதம்!

கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா, ஸ்டாலின் காரசார விவாதம்!

456
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகின்றது.

கச்சத்தீவை மீட்க, தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் துவங்கியது முதல் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 1991-ம் ஆண்டு கூறியபடி, கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உறுப்பினர் பொன்முடி ஆளுங்கட்சியான அதிமுக-வை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பொன்முடியின் கேள்விக்கு ஆவேசமாகப் பதிலளித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, “திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார்?” என்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கச்சத்தீவு குறித்த பேச திமுகவுக்கு அருகதை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

Stalin-Karunanidhi_1929706fஇதற்குப் பதிலளித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், “கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974-ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார்.”

“அமைச்சரவையைக் கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.