Home கலை உலகம் சல்மானை கவர்ந்தது எப்படி? சனா கான் பேட்டி

சல்மானை கவர்ந்தது எப்படி? சனா கான் பேட்டி

534
0
SHARE
Ad

sana-khanமும்பை, மார்ச்.18- இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடிக்கிறார் சனா கான். ‘சிலம்பாட்டம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘பயணம்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான்.

இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம், தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேட்டபோது, சிம்பு என பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இந்தியில் ‘பாம்பே டு கோவா, ‘ஹல்லா போல்’ என ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்குள்ள நடிகைகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த சமயத்தில் தான் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் வடநாட்டு தொலைக்காட்சியில்  நடத்திவரும் ‘பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில்’ சனா கான் பங்கேற்றார்.

அப்போது முதல் சல்மானை புகழ்ந்த வண்ணம் இருந்தார். அதற்கு  பலன் கிடைத்திருக்கிறது. சல்மான் கான் நடிக்கும் ‘மென்டல்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதில் கவுரவ வேடத்தில் தான் சனா நடிக்கிறார் என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி சனா கான் கூறும்போது, ‘சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு ‘மென்டல்’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.

பாலிவுட்டில் எனது திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. கவுரவ வேடத்தில் நடிக்கிறீர்களா? என்கிறார்கள். படம் முழுவதும் வரும் கதாநாயகி வேடம்தான். படம் வரும்போது எனது வேடத்தை பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள். ‘பிக் பாஸ்’  நிகழ்ச்சி மூலம் எனது திறமையை பார்த்து சல்மான் இந்த வேடத்தை கொடுத்துள்ளார் என்றார்.