Home Featured நாடு டூத்தாமாஸ் சம்பவம்: பழிவாங்கும் நோக்கம் காரணமா?

டூத்தாமாஸ் சம்பவம்: பழிவாங்கும் நோக்கம் காரணமா?

493
0
SHARE
Ad

Pub murderகோலாலம்பூர் – ஜாலான் டூத்தாமாஸ் 1 -ல் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த பெண் உட்பட மூன்று பேரை வெட்டிச் சாய்த்தது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த 23 வயது பெண்ணும், 21 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அவர்கள் இருவரும் ஆர்.மைதுரி, எஸ்.மோகன் என்பது தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த மற்றொருவரான ஆலன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செந்துல் ஓசிபிடி துணை ஆணையர் ஆர்.முனுசாமி கூறுகையில், புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என நம்பப்படும் 6 பேரை காவல்துறை தடுத்து வைத்துள்ளதாகவும், அடுத்த 7 நாட்கள் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆர்.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த கொலையாக இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால், 03-21159999 என்ற எண்ணுக்கு அழைக்கும் படி காவல்துறை தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.