Home Featured நாடு மலேசியாவிலுள்ள தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

மலேசியாவிலுள்ள தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

617
0
SHARE
Ad

US embassyகோலாலம்பூர் – புச்சோங் இரவு கேளிக்கை விடுதியில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின்புலமாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சதி வேலை இருப்பதாக காவல்துறை அறிவித்ததை அடுத்து, மலேசியாவில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவிலுள்ள அமெரிக்கர்கள், தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பில் எப்போதும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எனினும், மலேசியாவில் வாழும் அமெரிக்க பிரஜைகளுக்கு எந்த ஒரு தனிப்பட்ட தீவிரவாத அமைப்பிடமிருந்தும் அச்சுறுத்தல் வந்துள்ளதா? என்பதை தாங்கள் அறியவில்லை என்றும் மலேசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஒப்புக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice