Home Featured உலகம் செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றார்

செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றார்

592
0
SHARE
Ad

இலண்டன் – விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெற்றியாளராக அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மீண்டும் வாகை சூடியுள்ளார். விம்பிள்டன் வெற்றியை 7வது முறையாக பதிவு செய்திருக்கின்றார் செரினா.

Serena-williams-wins-wimbledonஇதன் மூலம் இதுவரை, 22 கிராண்ட் ஸ்லாம் எனப்படும் அகில உலக அளவிலான டென்னிஸ் போட்டி பட்டங்களைப் பெற்றிருக்கின்றார் செரினா. இதன் காரணமாக, இதற்கு முன்னர் இத்தகைய வெற்றியைப் பெற்றிருந்த ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃபின் சாதனையை செரினா சமன் செய்திருக்கின்றார்.

ஸ்டெபி கிராஃப்பும் 7 முறை விம்பிள்டன் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் ஆங்கலிக் கெர்பர் என்பவரைத் தோற்கடித்து இந்த வெற்றியை செரினா பெற்றிருக்கின்றார்.