Home Featured நாடு புதியக் கட்சியைப் பதிவு செய்வதில் சிக்கல் வரலாம் – மகாதீர் கருத்து!

புதியக் கட்சியைப் பதிவு செய்வதில் சிக்கல் வரலாம் – மகாதீர் கருத்து!

515
0
SHARE
Ad

mahathir-mohamadபுத்ராஜெயா – தனது புதிய கட்சியை விரைவில் பதிவு செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.

அதேவேளையில், புதியக் கட்சியைப் பதிவு செய்யத் தான் மிகவும் அலைகழிக்கப்படலாம் என்றும், மாதக் கணக்கில் இழுத்தடிக்கப்படலாம் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“புதியக் கட்சியைப் பதிவு செய்ய முயற்சி செய்தால், அது அவ்வளவு விரைவாக அனுமதிக்கப்படாது அல்லது மாதம் அல்லது வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் வாய்ப்புள்ளதை அறிவோம்”

#TamilSchoolmychoice

“எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முயற்சி செய்கிறோம். ஆனால் நாங்கள் கட்சியை அமைத்து, அதன் நோக்கங்கள் குறித்து முறையாக அறிவிப்போம்” என்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் தெரிவித்துள்ளார்.