Home Featured நாடு டத்தின் வோங் கொலைக்குக் காரணம் 13 மில்லியன் ரிங்கிட் தொழில் முதலீடு!

டத்தின் வோங் கொலைக்குக் காரணம் 13 மில்லியன் ரிங்கிட் தொழில் முதலீடு!

755
0
SHARE
Ad

Taman oug shootingகோலாலம்பூர் – 13 மில்லியன் ரிங்கிட்டுக்கான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் விளைவு தான், கூலிப்படையை ஏவி டத்தின் வோங் சியூ லிங்கைக் கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை மாநகரக் காவல்துறை ஆணையர் டத்தோ அமர் சிங் கூறுகையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபருடன் இணைந்து, தொழில் ஒன்றில் சில முதலீடுகளைச் செய்துள்ளார் வோங் என்று தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த முதலீடுகளைத் திரும்பத் தர மறுத்த அந்நபர், கூலிப்படையை ஏவி இக்கொலையைச் செய்திருக்கலாம் என காவல்துறை நம்புவதாகவும் அமர் சிங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, வெளியான செய்தியில், இக்கொலையைச் செய்த கூலிப்படையைச் சேர்ந்த இருவருக்கு 1 லட்சம் ரிங்கிட் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.