Home Featured நாடு தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம் – எம்எச்370 தேடுதல் குழு கூறுகின்றது!

தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம் – எம்எச்370 தேடுதல் குழு கூறுகின்றது!

718
0
SHARE
Ad

MH370..கோலாலம்பூர் – எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள டச்சு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானம் விழுந்து நொறுங்கிய கடைசி நிமிடங்களில், அது கடலுக்கு அடியில் சறுக்கிச் சென்றிருக்கலாம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தவறான இடத்தில் தேடுதல் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை வடக்கு ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 120,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தேடுதல் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அப்பணி இன்னும் 3 மாதங்களில் முடிவடைகின்றது. அதன் பின்னர் மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது.

#TamilSchoolmychoice