Home உலகம் எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!

எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!

1287
0
SHARE
Ad

சிட்னி – 239 பேருடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ஐ கண்டறியும் முயற்சியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயந்திரவியல் (மெக்கானிக்கல்) பொறியியலாளர் பீட்டர் மெக்மகோன் (வயது 64), ‘கூகுள் எர்த்’ உதவியுடன் தான் எம்எச்370 விமானம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக விமானங்கள் விழுந்து நொறுங்கும் சம்பவங்களை விசாரணை செய்து வரும் பீட்டர், நாசா மற்றும் கூகுள் மேப்பின் உதவியோடு, மொரீசியசில் இருந்து வடக்கே உள்ள ரவுண்ட் தீவின் தெற்கே 10 மைல் தொலைவில் ஆழ்கடலில் எம்எச்370 விமானம் இருப்பதாக நம்புகிறார்.

#TamilSchoolmychoice

பீட்டர் வெளியிட்டிருக்கும் கூகுள் எர்த் படத்தில், கடலுக்கடியில் விமானம் போன்றதொரு உருவம் தென்படுகின்றது.

இதனிடையே, பீட்டர் டெயிலி ஸ்டார் ஆன்லைன் இணையதளத்திடம் இது குறித்துக் கூறுகையில், “எம்எச்370 கண்டறியப்பட்டிருப்பது தொடர்பாக நான்கு அமெரிக்கர்கள் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கிடைத்த அனைத்து தகவல்களையும் மக்களிடமும், நமது அரசாங்கத்திடமும் மறைப்பதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். எதற்காக? இந்தக் கண்டுபிடிப்பு நடக்கக்கூடாது என்பதற்காக. காரணம், அதில் (எம்எச்370) முற்றிலும் குண்டுகள் துளைத்த அடையாளங்கள் உள்ளன. அது வெளியே தெரிய வந்தால் இன்னொரு விசாரணை தொடங்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

எம்எச்370 விமானம் மாயமானது தொடர்பில் உலக வான்போக்குவரத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள் பல்வேறு கோட்பாடுகள் கூறப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்று, அமெரிக்க – தாய்லாந்து போர் பயிற்சியின் போது, அவ்வழியே சென்ற எம்எச்370 விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.