Home நாடு ஞானராஜாவுடன் லிம் குவான் எங் – புதிய படம் வெளியானது!

ஞானராஜாவுடன் லிம் குவான் எங் – புதிய படம் வெளியானது!

1001
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் விவகாரத்தில் சிக்கிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஞானராஜாவுடன், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் எடுத்திருக்கும் மற்றொரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றது.

இதற்கு முன்பு, ஞானராஜாவுடன், லிம் குவான் எடுத்திருந்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியான போது, அதற்கு விளக்கமளித்த லிம் குவான் எங் அலுவலகம், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இது போன்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது சகஜம் தான் எனத் தெரிவித்திருந்தது.

அதேவேளையில், அதே டத்தோஸ்ரீ உடன் ஸ்டார் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் எடுத்திருக்கும் புகைப்படத்தையும் லிம் குவான் எங் சுட்டிக்காட்டி, தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளரே அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் பாருங்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், லிம் குவான் எங், டத்தோஸ்ரீ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவர்கள் இருவரும் காலணி அணிந்திருக்கவில்லை என்பதால் அது தனிப்பட்ட முறையில் இல்லத்தில் நடந்த சந்திப்பு என வோங் சுன் வாய் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், லிம் குவான் எங்கும், டத்தோஸ்ரீ ஞானராஜாவும் காரில் பின்னிருக்கையில் அமர்ந்தபடி தம்படம் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.