Home One Line P1 “எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்

“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்

940
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் “வாய் திறக்க” வேண்டும் என்று ஜசெக இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, எம்எச்370 விபத்து விமானியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோகமான வெகுஜன கொலை என்று டோனி அப்போட் குறிப்பிட்டிருந்தார்.

“எம்எச்370 விமானம் காணாமல் போனது விமானியின் தற்கொலை எண்ணத்தினால்தான் என்ற முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்டின் கருத்துக்கு மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதிர்ச்சியடைய வேண்டும்” என்று லிம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படம்: முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்
#TamilSchoolmychoice

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் எம்எச்370 காணாமல் போனபோது, ​ ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த அப்போட், மலேசியாவிலிருந்து “உயர்மட்ட” அரசாங்கத் தலைவர்களால் விமானியின் ஈடுபாட்டைப் பற்றி தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், அந்தத் தலைவர்களைப் பெயரிடுவதை அவர் நிறுத்திவிட்டார்.

“எம்எச்370 காணாமல் போனது பற்றிய புதிய விவரங்களை ஸ்கைநியூஸ் இன்று இரவு மற்றும் நாளை இரவு இரண்டு பகுதி விசாரணையை ஒளிபரப்ப இருப்பதால்,உலகம் அதற்காகக் காத்திருக்கும்” என்று லிம் மேலும் கூறினார்.

ஒரு வாரத்திற்குள் விமானம், விமானியால் வீழ்த்தப்பட்டது என்பது அவருக்கு தெளிவாக தெளிவுபடுத்தப்பட்டதாக அப்போட் கூறினார்.

இந்த விமானத்தை மலேசிய கேப்டன் ஜாஹாரி அகமட் ஷா இயக்கினார்.

“யார் யாரிடம் என்ன சொன்னார்கள் என்று நான் சொல்லப்போவதில்லை, ஆனால் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் முற்றிலும் தெளிவாக இருக்கிறேன். இது விமானியால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் என்று மிக உயர்ந்த மட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டது,” என்று அப்போட் கூறியுள்ளார்.

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் ராடார் திரையில் இருந்து மறைந்துபோன போயிங் 777 பயணிகள் விமானம் காணாமல் போனது தொடர்பாக விமான வல்லுநர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டதில், விமானத்தை கண்டுபிடிப்பதற்கான கடைசி தேடல் நடவடிக்கைகள் மே 2018-இல் முடிவடைந்தன.

இன்றுவரை, பிளாபெரான் என அழைக்கப்படும் விமானத்தின் மூன்று சிறகு துண்டுகள் மட்டுமே எம்எச்370-லிருந்து உடைப்பட்ட பாகங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.