Home One Line P2 தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர்!

தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர்!

837
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், அரசியல் கட்சியினரும் தடையை மீறி திரலாக கூடியுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இஸ்லாமிய அமைப்புகளின் சட்ட மன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 11-ஆம் தேதி வரையிலும் தடை விதித்திருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று புதன்கிழமை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன.

#TamilSchoolmychoice

முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது தமிழகம் எங்கிலும் எதிர்ப்பு போராட்டமாய் வெடித்தது.

அதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவிலும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறவேற்றப்பட்டதிலிருந்து போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.