Home கலை உலகம் பாடகி சித்தி நூர்ஹாலிசாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது!

பாடகி சித்தி நூர்ஹாலிசாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது!

1226
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹாலிசா இன்று திங்கட்கிழமை காலை கோலாலம்பூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அறுவை சிகிச்சை முறையில், காலை 8.17 மணியளவில், பிறந்த அப்பெண் குழந்தை 3.55 கிலோ கிராம் எடையுடன் இருப்பதாக சித்தியின் மேலாளர் ரோசி அப்துல் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

“சித்தியும் அவரது குழந்தையும் நலமுடன் இருக்கிறார்கள். சித்தி தம்பதி தங்களது முதல் குழந்தை, நபிகள் முகமட் சா பிறந்த திங்கட்கிழமையில் பிறக்க வேண்டுமென்று விரும்பினார்கள். அதோடு, இன்று இஸ்லாமிய மாதம் ரெஜாப்பின் முதல் நாளும் கூட” என்றும் ரோசி அப்து ரசாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

 

39 வயதான சித்தி நூர்ஹாலிசா, கடந்த 2006-ம் ஆண்டு, டத்தோ காலிட் முகமது ஜிவாவைத் திருமணம் செய்தார்.

கடந்த 11 ஆண்டுகளாக குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த அத்தம்பதிக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகிழ்ச்சியான மாதமாக அமைந்து, சித்தி கருவுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.