Home One Line P1 சித்தி நூர்ஹலிசாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை

சித்தி நூர்ஹலிசாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் பிரபல பாடகி சித்தி நூர்ஹலிசா தருடின் இன்று காலை 6.21 மணிக்கு சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சித்தியின் நிர்வாகத்தின்படி, சித்தி நூர்ஹலிசாவின் கணவர் காலிட் முகமட் ஜிவா தனது மனைவியும் குழந்தையும் நல்ல நிலையில் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறினார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாகவும், பிறப்பு செயல்முறை சீராகவும் நடந்துள்ளது. குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், இரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பிரார்த்தனைகளுக்கு அவரும் அவரது மனைவியும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

அதே அறிக்கையின் மூலம், பிரசவ செயல்முறைக்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சித்தி நூர்ஹலிசா நன்றி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இன் விட்ரோ பெர்டிலைசேஷன் (ஐவிஎப்) செயல்முறை வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ஆல்பா ஐவிஎப் இயக்குனர் டாக்டர் கொலின் லீ சூன் சூக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்,” என்று அது கூறியது.