Home கலை உலகம் சித்தி நூர்ஹலிசாவுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

சித்தி நூர்ஹலிசாவுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

651
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சித்தி நூர்ஹலிசா மற்றும் அவரது கணவர் டத்தோ கே ஆகியோருக்கு மே மாத தொடக்கத்தில், அவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததற்கான விழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் மற்றும் நன்கு அறியப்பட்ட பேச்சாளர்கள் அசார் இத்ரஸ், டான் டானியல் மற்றும் இக்பால் ஜெய்ன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்தார்.

அவர்கள் மூவருக்கும் தலா 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக பெரித்தா ஹாரியான் ஊடகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டபோதும், ​​இவர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டதற்கு சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது.