கோலாலம்பூர்: வீட்டிலிருந்து வேலை செய்வது ஓய்வெடுப்பதற்கும், வேலை செய்யாமல் இருப்பதற்கும் அல்ல என்று அரசு ஊழியர்களிடம் கூறப்பட்டுள்ளது.
மாதாந்திர பொது சேவைத் துறை சந்திப்பில் பேசிய இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான், அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது அன்றாட பணிகளைச் செய்ய வேண்டும் என்றார்.
சுமார் 80 விழுக்காடு அரசு ஊழியர்கள் மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.
“வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீங்கள் உண்மையில் வீட்டிலேயே கடமையில் இருக்கிறீர்கள், விடுமுறையில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“அலுவலகத்தில் செய்யப்படும் பணிகளை வீட்டில் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் அலுவலகத்தில் இருப்பது போலவே அந்தந்த வேலைகளை விட்டு வெளியேறக்கூடாது,” என்று அவர் கூறினார்.