Home நாடு அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு பரவலான வரவேற்பு!

அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு பரவலான வரவேற்பு!

168
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவித்த அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அனைத்துத் தரப்புகளிலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரையிலான ஊதிய உயர்வு அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

வாழ்க்கைச் செலவின உயர்வுகள் காரணமாக அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் இந்த ஊதிய உயர்வு மூலம் ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நிருவாகம், நிபுணத்துவம் சார்ந்த துறைகளில் பணிபுரியும் அரசாங்க ஊழியர்கள் 15 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெறுவர்.

நிருவாகம் சார்ந்த உயர்மட்ட அரசாங்க ஊழியர்கள் 7 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெறுவர்.

இந்த புதிய ஊதிய உயர்வின் முதல் கட்ட அமுலாக்கம் டிசம்பர் 1-ஆம் தேதி முதற்கொண்டு தொடங்கும். இரண்டாம் கட்ட அமுலாக்கம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமுலாக்கம் காணும்.

இதற்கு முன்னர் கடந்த ஊதிய உயர்வு 12 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அரசாங்க சேவையில் சேர்வதற்கு குறைந்த பட்சம் எஸ்.பி.எம் தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற நிர்ணயமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அரசாங்க சேவையில் இணைய எண்ணம் கொண்டுள்ளவர்கள், எஸ்பிஎம் தேர்வை நிறைவு செய்ய முயற்சி செய்வார்கள்.

துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும் இந்த ஊதிய உயர்வை வரவேற்றுள்ளார்.

தங்களின் பணிகளை முறையாகச் செய்யாதவர்கள், தாமதமாகச் செய்பவர்கள், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்நோக்குபவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அன்வார் அறிவித்தார்.