பாங்காக் – தாய்லாந்து அரசியலில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி 37 வயதான பேட்டோங்க்தார்ன் ஷினாவாத்ரா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது பியூ தாய் கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்றது. ஆனால் இராணுவத்தின் எதிர்ப்பால் அவரால் பிரதமராக முடியவில்லை.
முந்தைய பிரதமரும் பிரபலமான அரசியல்வாதியுமான தாக்சின் ஷினாவாத்ராவின் கடைசி மகளான அவர், தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரி இங்க்லக் ஷினவாத்ரா ஆகியோரின் பாதையில், அந்தக் குடும்பத்தில் இருந்து 3-வது நபராக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பேட்டோங்க்தார்ன்.
பிரதமர் ஸ்ரேத்தா தாவிஸின் ஒரு நீதிமன்ற உத்தரவால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்டோங்க்தார்ன் அடுத்த பிரதமராகத் தேர்வாகியிருக்கிறார்.
பேட்டோங்க்தார்ன் வயது குறைந்த இளம் தாய்லாந்து பிரதமராகவும், அந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் திகழ்வார்.
அவரின் தந்தை ஷினவாத்ரா 2001-இல் பிரதமரானார். அவரின் ஆட்சி 2006-ஆம் ஆண்டிலும் பாயிதோங்தார்ன்னின் அத்தை இங்க்லக்கின் ஆட்சி 2014 ஆம் ஆண்டிலும் இராணுவத்தால் கலைக்கப்பட்டன.
தக்சின், நீண்டகாலமாக அயல்நாடுகளில் அரசியல் அடைக்கலம் கண்டிருந்த பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு திரும்பினார்.