Home நாடு கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் 4 மற்றும் 5 வகைகளின் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன் அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறுகையில், இந்த நோயாளிகள் முன்பு மொத்த எண்ணிக்கையில் 5 விழுக்காடுகள் மட்டுமே இருந்தனர் என்றார். ஆனால், இதுபோன்ற கடுமையான சம்பவங்கள் இப்போது 15 விழுக்காடு நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வகை 4- இல் பிராணவாயு வழங்கல் தேவைப்படும். நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அடங்கும். அதே நேரத்தில் வகை 5-இல் பல உறுப்பு சிக்கல்களைக் கொண்ட முக்கியமான நோயாளிகளை உள்ளடக்கியது.

#TamilSchoolmychoice

20 முதல் 40 வயதுக்குட்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

“கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.