Home நாடு நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்த அசலினாவை பாராட்டிய கிட் சியாங்

நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்த அசலினாவை பாராட்டிய கிட் சியாங்

624
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தியதற்காக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அசலினா சபாநாயகராக இருக்க தகுதியுடையவர் என்று லிம் கூறினார். தற்போது இந்த பதவியை முன்னாள் வழக்கறிஞர் அசார் அசிசான் ஹருன் வகிக்கிறார்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையை பாதுகாக்க அசார் தவறிவிட்டார் என்றும் லிம் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பாதுகாவலராக அசார் நிற்க தவறிவிட்டார் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்று குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க மலேசியாவுக்கு இருக்கும் ஒரே வழி மக்களவையை மீண்டும் கூட்டுவதுதான் என்று அசலினா இன்று காலை பரிந்துரைத்திருந்தார்.