Home நாடு மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை

மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை

434
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் – சட்டத் துறை அமைச்சர் அசாலினா ஓத்மான் இருவரும் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் அறிவித்தனர்.

நீண்டகாலமாக தாய்மார்கள் இந்த உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இதற்காக இப்போது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.