கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயை சமாளிப்பதில் மலேசியா வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதுதான் என்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட் பரிந்துரைத்துள்ளார்.
எவ்வாறாயினும், தேவையற்ற விவகாரங்களைத் தவிர்ப்பதற்காக, தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை மற்றும் குழுவின் நோய் எதிர்ப்பு சக்தி 50 விழுக்காடு அடையும் வரை எந்தவிதமான நம்பிக்கையில்லா தீர்மானமும் முன்வைக்கக்கூடாது என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“எந்தவொரு பொதுத் தேர்தலும் நடத்தப்படக்கூடாது, அதற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவசர அமைச்சரவையுடன் ஒரு தற்காலிக அவசரகால அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.