Home உலகம் டாக்டர் நூர்: இன்ஸ்டாகிராம் பயனர்களை உதவுமாறு வெளியுறவு அமைச்சு கோரிக்கை

டாக்டர் நூர்: இன்ஸ்டாகிராம் பயனர்களை உதவுமாறு வெளியுறவு அமைச்சு கோரிக்கை

671
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியரான ‘டாக்டர் நூர்’ என்பவரை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் தகவல்களை விரைவாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவிக்குமாறு தனிநபர்களையும், இன்ஸ்டாகிராம் கணக்குகளின் உரிமையாளர்களான @iesya_toh மற்றும் @nurhelizahelmi ஆகியோரை வலியுறுத்துகிறது.

டாக்டர் நூர் அடையாளம் மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்களைக் கொண்ட எந்தவொரு நபரும் முன்வந்து bkrm@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் தகவல்களை வழங்குமாறு விஸ்மா புத்ரா நேற்று இரவு ஓர் அறிக்கையில் அமைச்சகம் கூறியது.

“டாக்டர் நூருக்கு உதவ அமைச்சகம் தீர்வு காண இந்த விஷயத்தில் மேலதிக தகவல்கள் முக்கியம்,” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

“இருப்பினும், தனிப்பட்ட விவரங்களையும், டாக்டர் நூருக்கு நேர்ந்த சம்பவத்தையும் அமைச்சகத்தால் கண்டறிய முடியவில்லை. இது மலேசிய பிரதிநிதிகளின் நபரைத் தொடர்புகொண்டு உதவி வழங்குவதற்கான முயற்சிகளை சிக்கலாக்கியது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கெய்ரோ, எகிப்து மற்றும் அம்மானில் உள்ள மலேசிய தூதரகங்களுடனான தொடர்பின் போதும் ‘டாக்டர் நூர்’ என்ற எந்தவொரு நபரும் பாலஸ்தீனத்தில் தனது இருப்பைப் பதிவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.