Home நாடு பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்

பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தி ஸ்டாரிடம் பேசிய அவர், தனது பதவி நீக்கம் ஒரு முக்கிய பிரச்சனை அல்லது கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல என்று கூறினார்.

“எனக்கு ஏற்கனவே கடிதம் வந்துள்ளது. இப்போது கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. இது ஒரு முக்கியமான பிரச்சனை அல்லது கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல, ” என்று நேற்று இரவு அவர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அவரது பதவி விலகல் குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

மே 24 கெலானா ஜெயா எல்ஆர்டி விபத்தின் பத்திரிகையாளர் சந்திப்பைக் கையாண்ட விதம் பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இது எல்ஆர்டி வரலாற்றில் மிக மோசமான விபத்து. இதில் 213 பயணிகள் காயமடைந்தனர். சிலர் பலத்த காயம் அடைந்தனர். மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.