Home நாடு எல்ஆர்டி விபத்து: இரு இரயில்களும் அகற்றப்பட்டன

எல்ஆர்டி விபத்து: இரு இரயில்களும் அகற்றப்பட்டன

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திங்கட்கிழமை இரவு விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு எல்ஆர்டி இரயில்களும் எதிர்பார்த்ததை விட முன்னதாக வழிபாதையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 5.24 மணியளவில் ரேபிட் ரெயில் மீட்புக் குழுவிடமிருந்து இந்த அறிவிப்பைப் பெற்றதாக வீ கூறினார். பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களால் மூன்று இடைவிடாத அயராத உழைப்புக்குப் பிறகு இரு இரயில்களும் அகற்றப்பட்டுள்ளன.

பழுதுபார்க்கும் பணிகள் முடிந்ததும், வழிபாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நில பொது போக்குவரத்து நிறுவனம் (ஏபிஏடி) ஓர் ஆய்வை மேற்கொள்ளும் என்று வீ கூறினார்.