Home நாடு எப்எம்டிக்கு எதிரான வழக்கை கோம்பாக் காவல் துறை தலைவர் திரும்பப் பெற்றார்

எப்எம்டிக்கு எதிரான வழக்கை கோம்பாக் காவல் துறை தலைவர் திரும்பப் பெற்றார்

652
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கணபதியின் மரணம் குறித்து காவல் துறையினருக்கு மறைக்க எதுவும் இல்லை, என்று கோம்பாக் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறினார். தற்போது, அரிபாய் புக்கிட் அமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக எப்எம்டியில் வெளிவந்த கட்டுரைகள் தொடர்பாக அச்செய்தி நிறுவனத்திற்கு எதிரான 10 மில்லியன் ரிங்கிட் வழக்குத் தொடுப்பதாகக் கூறியிருந்தார். ஆயினும், தற்போது அதனை திரும்பப் பெறுவதாக அவர் கூறினார்.

அரிபாய் ஜூன் 21- ஆம் தேதி புக்கிட் அமானில் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறைக்கு மாற்றப்பட உள்ளார்.

#TamilSchoolmychoice

செய்தித் தளத்திற்கு அளித்த பேட்டியில், அரிபாய் தனது இடமாற்றம் குறித்த அறிக்கைகள் கணபதி வழக்கின் பின்னணியை உள்ளடக்கி இருந்ததால் வருத்தப்படுவதாகக் கூறினார்.

“ஆனால், என்னை எதிர்மறையாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை என்பதையும், செய்திகளைப் வழங்குவதில் பத்திரிகைகள் தனது வேலையைச் செய்கின்றன என்பதையும் நான் உணர்ந்தேன்.

“அதனால்தான் எப்எம்டியுடன் இணக்கமாக தீர்ப்பது சிறந்தது என்று நான் முடிவு செய்தேன். நாங்கள் சந்திக்க ஒப்புக்கொண்டோம். எனது நிலைப்பாட்டை விளக்கினேன். எப்எம்டி என்னையோ அல்லது எனது அதிகாரிகளையோ மோசமாக காண்பிக்கும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

“எப்எம்டிக்கு எதிரான வழக்கை நான் திரும்பப் பெறுகிறேன்,” என்று அவர் கூறினார்.

தடுப்புக் காவலில் இருந்தபோது கணபதி துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருப்பதை அரிபாய் உறுதியளித்தார்.