Home நாடு இரவு 8 மணிக்கு உணவகங்கள் மூடப்படுவது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது

இரவு 8 மணிக்கு உணவகங்கள் மூடப்படுவது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இரவு 8 மணிக்குள் உணவகங்களை மூட வேண்டும் எனும் கட்டுப்பாட்டை உணவக சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜே.சுரேஷ் கூறுகையில், இந்த கட்டுப்பாடு உணவகங்கள், உணவு விநியோக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

“உணவகங்கள் தங்கள் உணவகங்களை மூடுவதற்குள் விரைந்து இரவு 7 மணிக்குள் கடைசி விற்பனையை முடிக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த கட்டுப்பாடுகள் உணவு விநியோக சேவையில் ஈடுபட்டிருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், ஏனெனில் அவர்கள் விரைந்து செல்ல வேண்டியிருக்கும்.

இயக்க நேரங்களை இரவு 10 மணி வரை நீட்டிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். இது அவசரத்தைத் தடுக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.