Home நாடு மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

1308
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய ஆய்வில், 15 விழுக்காடு ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று மகாதீர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக உலகக் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், 8.30 விழுக்காடு ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 2.50 விழுக்காடு  ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று 14-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

மேலும், மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் பெண்கள் பட்டியலில், 14.10 விழுக்காடு  ரசிக்கப்படும் மதிப்பெண்கள் பெற்று, மலேசியப் பாடகி சித்தி நூர்ஹாலிசா முதலிடத்தையும், மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது அலி 10.10 விழுக்காடு ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோர் 1 விழுக்காடு ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று 20-வது இடத்தையும் பிடித்திருக்கிறார். ரோஸ்மா போலவே 1 விழுக்காடு ரசிக்கப்படும் மதிப்பெண் பெற்று 20-வது இடத்தைப் பிடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மலேசியாகினி