Home நாடு பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!

பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!

1212
0
SHARE
Ad

புக்கிட் மெர்த்தாஜாம் – பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் செயலாளர் சதீஸ் முனியாண்டியை களமிறக்கவும் ஜசெக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

தனது தொகுதியில் இழுபறி நிலவி வருவதை கஸ்தூரியும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பாரிஷான் நேஷனல் தான் அதற்குக் காரணம் என்றும் கஸ்தூரி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரம் பிறை தொழிற்துறைப் பகுதியில், கூட்டரசு சாலை விரிவாக்கத்தை உள்ளடக்கியது” என்றும் கஸ்தூரி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 200,000 ரிங்கிட் தான் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கஸ்தூரி அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், கஸ்தூரி தனது தந்தையும் ஜசெக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான மறைந்த பி.பட்டு, கோப்பெங் சட்டமன்றம், மெங்கெலெம்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த பேராக் மாநிலத்தில் உள்ள தொகுதியில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், பத்து கவான் தொகுதியில் போட்டியிட்ட கஸ்தூரி பட்டு, 25,962 வாக்குகள் பெரும்பான்மையில் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.