Home இந்தியா முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி!

முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி!

1147
0
SHARE
Ad

சென்னை – இமையமலையில் ஆன்மீக குருமார்களைச் சந்தித்து ஆசி பெறச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அப்பயணத்தை முடித்துவிட்டு முழு உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு, உடல்நலக்குறைவால், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற ரஜினி, மறுபிறப்பெடுத்து நலமுடன் திரும்பி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று முழு உடல் பரிசோதனை செய்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

அந்த வகையில், இந்த ஆண்டும் உடல் பரிசோதனைக்காக அமெரிக்க செல்லவிருக்கிறார். அவருடன் அவரது மனைவி லதாவும், இளையமகள் சௌந்தர்யாவும் செல்லவிருக்கின்றனர்.

இப்பயணத்தை முடித்துவிட்டு வந்தவுடன் ரஜினி தனது அரசியல் பயணத்தை தீவிரமாகத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.