Home இந்தியா ஜம்மு ஷிவ் கோரி ஆலயத்தில் ரஜினி

ஜம்மு ஷிவ் கோரி ஆலயத்தில் ரஜினி

804
0
SHARE
Ad

புதுடில்லி – இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், ஜம்மு (காஷ்மீர்) மாநிலத்தில் உள்ள ஷிவ் கோரி சிவன் ஆலயத்திற்கு வருகை தந்து இன்று வழிபாட்டில் ஈடுபட்டார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவரது ‘காலா’ திரைப்படம் அடுத்த மாதம் 27-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ திரைப்படம் தொழில்நுட்பக் காரணங்களால் மேலும் தள்ளிப் போகும் என்ற நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவுக்கும், இமயமலைக்கும் ரஜினி வருகை மேற்கொண்டிருக்கிறார்.