Home கலை உலகம் ரஜினியின் அடுத்த படம் – கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்!

ரஜினியின் அடுத்த படம் – கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்!

997
0
SHARE
Ad

சென்னை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நம்பப்பட்டு வரும் நிலையில், திடீரென சன்பிக்சர்ஸ் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கும் அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, ரஜினி நடித்திருக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படமும், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ திரைப்படமும் வெளியாகக் காத்திருக்கும் நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது ரஜினி ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படியானால் ரஜினி, புதிய கட்சியை அறிவிக்க இன்னும் காலதாமதம் ஆகுமோ? என்ற எண்ணம் தற்போது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ரஜினியும், உலகநாயகன் கமல்ஹாசனும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டாலும், ரஜினிக்கு முன்பாக கமல் தனது புதிய கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வெளியிட்டுவிட்டதோடு, ‘இந்தியன் 2’, ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்கள் வெளியானதற்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.