Home நாடு சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக பக்காத்தானின் வழக்கு – மார்ச் 1 விசாரணை

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக பக்காத்தானின் வழக்கு – மார்ச் 1 விசாரணை

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை பதிவு செய்ய வேண்டுமென சங்கப் பதிவிலாகாவை வற்புறுத்தி, அந்தக் கூட்டணி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பக்காத்தான் ஹரப்பானின் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் ஷஹாருடின் முகமட் சாலே, அமானா கட்சியின் துணைச் செயலாளர் அபாங் அகமட் கெர்டி அபாங் மாசாகுஸ் ஆகிய ஐவரும் இந்த வழக்கை சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத் தொடுத்துள்ளனர்.

சங்கப் பதிவிலாகா விதித்த நிபந்தனைகளை பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் பூர்த்தி செய்துள்ளதாகவும், ஓர் அரசாங்க இலாகா என்ற முறையில் சங்கப் பதிவிலாகா தனது கடமையை முறையாகச் செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வாதிகள் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.