Home இந்தியா இமயமலை செல்கிறார் ரஜினி!

இமயமலை செல்கிறார் ரஜினி!

942
0
SHARE
Ad

சென்னை – ஏப்ரல் மாதம் காலா வெளியீடு, அதன் பின்னர் 2.0 திரைப்படம் வெளியீடு, அதற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு புதிய படம், அதை விட முக்கியமாக, கட்சி தொடங்கி அரசியல் பிரவேசம் என மிகுந்த பரபரப்போடு இருக்கும் ரஜினிகாந்த் நாளை சனிக்கிழமை இமயமலைக்குச் சென்று அங்கு, தான் புதிதாகக் கட்டியிருக்கும் ஆசிரமத்தைப் பார்வையிடவிருக்கிறார்.

நாளை சனிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் செல்கிறார். அங்கு 1 வார காலம் தங்கவிருக்கிறார்.

இம்முறைப் பயணத்தின் போது, நிறைய குருக்களைச் சந்தித்து ஆசி பெறவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

 

Comments