Home நாடு நஜிப் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தலே இல்லாமல் செய்து விடுவார் – மகாதீர் கிண்டல்!

நஜிப் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தலே இல்லாமல் செய்து விடுவார் – மகாதீர் கிண்டல்!

887
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றியடைந்தால், அடுத்த தேர்தலே இல்லாமல் செய்துவிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை பக்காத்தானின் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து வைத்த மகாதீர், அரசாங்கம் கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்து தேர்தலையே இரத்து செய்துவிடும் என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

“இதை நகைச்சுவைக்காக கூறுகிறோம் என்றாலும், நாம் அந்தளவிற்கு கவலையான சூழலில் இருக்கிறோம். நாம் கடுமையாக உழைக்கவில்லை என்றால், தோல்வியடைந்துவிடுவோம்”

#TamilSchoolmychoice

“நஜிப் வெற்றியடைந்தால், இது தான் நமக்குக் கடைசி தேர்தலாக இருக்கும். காரணம், அவர் தேர்தல் முறையையே இரத்து செய்துவிடுவார். மற்ற நாடுகளில் எப்படி நடக்கிறது என்று நாம் தான் கேட்டிருக்கிறோமே. தலைவர்கள் சிலர் நிரந்தரத் தலைவர்களாக இருக்க, தேர்தல் முறைகளையே இரத்து செய்திருக்கிறார்கள்.”

“நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், நஜிப் நிரந்தர பிரதமராக இருந்துவிட்டு, அவருக்குப் பின்னர் (அவரது வளர்ப்பு மகன்) ரிசா அஜிஸ் தான் வருவார்” என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மத்தியில் மகாதீர் தெரிவித்தார்.