Home நாடு முன்னாள் கெடா மந்திரி பெசார் சனுசி ஜுனிட் காலமானார்!

முன்னாள் கெடா மந்திரி பெசார் சனுசி ஜுனிட் காலமானார்!

807
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், கெடா மந்திரி பெசாருமான டான்ஸ்ரீ சனுசி ஜுனிட், தனது 74-வது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

அவரது நல்லுடல், கோலாலம்பூர் மஸ்ஜித் சைடினா உமர் புக்கிட் டாமன்சாராவில் வைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்படவிருக்கின்றன.

கடந்த 1963-ம் ஆண்டு அம்னோவில் இணைந்த சனுசி ஜுனிட், 1974-ம் ஆண்டு ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

#TamilSchoolmychoice

அதற்கடுத்து வந்த காலங்களில், துணையமைச்சர், அமைச்சர், கெடா மந்திரி பெசார் என அடுத்தடுத்து, பதவிகளை வகித்த அவர், கடந்த 2000-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் குவா சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இறுதியாக, 2008-ம் ஆண்டு அம்னோவில் இருந்து விலகிய அவர், பின்னர் 2016-ம் ஆண்டு, பெர்சாத்து கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துன் மகாதீரின் ஆட்சிக் காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் அவரது தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர் சனுசி ஜூனிட்.