Home இந்தியா கருணைக் கொலைக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

கருணைக் கொலைக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

1468
0
SHARE
Ad

புதுடெல்லி – மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவே தீராத நோய் கொண்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முக்கியத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மருத்துவக் குழு பரிசோதித்து, உயிர் பிழைக்க வழியே இல்லை என அறிக்கை கொடுக்கும் போது, அந்நோயாளி மரண வலியின்றி உயிர் பிரிய கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

பொதுநல வழக்காடு மையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம், மனிதர்கள் வாழ்வதற்கு எப்படி உரிமை உள்ளதோ? அதேபோல் கண்ணியமாக இறப்பதற்கும் உரிமையளிக்கும் படி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

#TamilSchoolmychoice

பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.