Home நாடு பெந்தோங்: லியோவ்வை வீழ்த்த லிம் கிட் சியாங் தயாராகிறாரா?

பெந்தோங்: லியோவ்வை வீழ்த்த லிம் கிட் சியாங் தயாராகிறாரா?

947
0
SHARE
Ad

பெந்தோங் – பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங்கைத் தோற்கடிக்க ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) நேரடியாகக் களமிறங்கக் கூடும் என தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

இந்த முறை மசீச, கெராக்கான் – இரண்டு தேசிய முன்னணியின் சீனக் கட்சிகளை முற்றாகத் தோற்கடிக்க ஜசெக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

ஜோகூர் ஆயர் ஈத்தாம் தொகுதியில் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கைத் தோற்கடிக்க, ஜோகூர் ஜசெக தலைவரும் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான லியூ சின் தோங் களமிறங்குகிறார்.

லியோவ் தியோங் லாய்
#TamilSchoolmychoice

கெராக்கான் தேசியத் தலைவர் மா சியூ கியோங்கைத் தோற்கடிக்க ஜசெக உதவித் தலைவர் எம்.குலசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில், மசீச தலைவரை எதிர்க்க ஜசெக நிறுத்தப்போவது யாரை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

லிம் கிட் சியாங்தான் அந்த வேட்பாளர் என்றும் மசீச தேசியத் தலைவரையே தோற்கடிப்பதன் மூலம் தேசிய முன்னணியையே ஆட்டங் காணச் செய்ய முடியும் என்றும் ஜசெக கருதுகிறது.

அதே வேளையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மாநிலமான பகாங்கிலேயே நுழைந்து, அமைச்சருமான லியோவ்வை தோற்கடிப்பதன் மூலம் சாதனை படைக்க கிட் சியாங் உத்தேசித்துள்ளார்.

அவ்வாறு போட்டியிட்டால் பகாங் மாநிலத்தில் லிம் கிட் சியாங் போட்டியிடுவது இதுவே முதன் முறையாகும்.