Home நாடு ஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக

ஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக

1068
0
SHARE
Ad
Wee-Ka-Siong-MCA-Deputy President
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் மசீச துணைத் தலைவருமான வீ கா சியோங்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங்கைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் ஜசெக, அந்தத் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஈத்தாம் தொகுதியை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்ற முடிந்தால், அந்த வெற்றியின் மூலம் ஜோகூர் மாநில அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் பக்காத்தான் கைப்பற்ற முடியும் என ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கணித்திருக்கிறார்.

DAP-Logo-Featureநேற்று சனிக்கிழமை ஆயர் ஈத்தாமில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது ஜசெகவின் அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடுகிறது.

ஆயர் ஈத்தாமில் வீ கா சியோங்கை எதிர்த்து ஜசெக யாரைக் களமிறக்கப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அடுத்த கேள்வி!

கேலாங் பாத்தா தொகுதியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கே ஆயர் ஈத்தாமில் களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.