
புதுடில்லி – சிபிஐ மற்றும் இந்திய அமுலாக்கப் பிரிவின் வழக்குகளில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கான தடுப்புக் காவலை புதுடில்லியிலுள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து தற்போது கார்த்தி சிதம்பரம் திஹார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
மார்ச் 24-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.