Home இந்தியா கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கையில் போட்டி!

கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கையில் போட்டி!

320
0
SHARE
Ad
கார்த்தி சிதம்பரம்

சென்னை : எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையால் வெளியிடப்பட்டது.

தமிழ் நாட்டில் 9 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது.

எதிர்பார்த்தபடி சிவகங்கை தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:

திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில்

கரூர் – ஜோதிமணி

விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்

கன்னியாகுமரி – விஜய் வசந்த்

கடலூர் – விஷ்ணு பிரசாந்த்

கிருஷ்ணகிரி – கோபிநாத்