Home நாடு மலேசியக் காவல் அதிகாரியிடம் 2 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

மலேசியக் காவல் அதிகாரியிடம் 2 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

343
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றும் மூத்த உயர் அதிகாரி ஒருவர் சட்டவிரோதச் செயலுக்காக இலஞ்சம் பெற்றதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த காவல் துறை அதிகாரி தொடர்புடைய இல்லங்களில் பரிசோதனை நடத்தப்பட்டபோது, 2 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வாக்குமூலம் வழங்க ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அவரின் கைது நடவடிக்கையை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.