Home இந்தியா அதிமுக, நெல்லை வேட்பாளர் மாற்றம்

அதிமுக, நெல்லை வேட்பாளர் மாற்றம்

308
0
SHARE
Ad

சென்னை : பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் வேளையில் இறுதி நேரத்தில் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துசோழன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய வேட்பாளராக ஜான்ஸிராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிம்லா முத்து சோழன் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்ற காரணத்தால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

அவர் பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.