Home இந்தியா நடராஜனைச் சந்தித்து நலம் விசாரித்தார் வைரமுத்து!

நடராஜனைச் சந்தித்து நலம் விசாரித்தார் வைரமுத்து!

857
0
SHARE
Ad

சென்னை – கவலைக்கிடமான நிலையில், சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜனை, கவிஞர் வைரமுத்து இன்று திங்கட்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

ம.நடராஜன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் வைரமுத்து ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பு, நடராஜனை, ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன், மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது கணவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதைத் தொடர்ந்து சிறையிலிருந்து தற்காலிக விடுப்பில் வெளிவந்து, தனது கணவரை சசிகலா சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.