Home நாடு எம்எச்370 விமானத்தைத் தேடத் தொடங்கியது அமெரிக்க நிறுவனம்!

எம்எச்370 விமானத்தைத் தேடத் தொடங்கியது அமெரிக்க நிறுவனம்!

879
0
SHARE
Ad

MH370கோலாலம்பூர் – ‘ஓசன் இன்பினிட்டி’ என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் மலேசியா செய்திருக்கும் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘சீபெட்டு கன்ஸ்டிரக்டர்’ என்ற கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியை தொடங்கியது.

இதனை உள்நாட்டு வான்போக்குவரத்துத்துறையின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

அண்மையில், ஓசன் இன்ஃபினிட்டி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று எம்எச்370 விமானத்தைத் தாங்கள் கண்டறிவதாக மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது.

#TamilSchoolmychoice

இந்தத் தேடுதல் பணிக்காக மலேசியா எந்த ஒரு நிதியையும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முற்றிலும் அந்நிறுவனமே செலவு செய்து இந்தத் தேடுதல் பணியை மேற்கொள்கிறது.

மலேசியாவுடன் அந்நிறுவனம் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் படி, எம்எச்370 பாகங்களைக் கண்டறிந்தால் மட்டுமே பணம், அப்படி கண்டறிய முடியவில்லை என்றால் மலேசியா பணம் கொடுக்கத் தேவையில்லை.

இதற்கு மலேசிய அரசும் ஒப்புக் கொண்டு அனுமதியளித்திருக்கிறது.

90 நாட்களுக்குள் அந்நிறுவனம் விமானத்தைக் கண்டறியும் பட்சத்தில் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை சன்மானமாகத் தர மலேசியா ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.