Home நாடு 1எம்டிபி தோல்விகளை ஒப்புக் கொண்டார் நஜிப்!

1எம்டிபி தோல்விகளை ஒப்புக் கொண்டார் நஜிப்!

784
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர் – 1எம்டிபி-ல் தோல்வியிருந்தது ஆனால் அரசியல் லாபத்திற்காக சில தரப்பினர், அதனை பெரிது படுத்திவிட்டனர் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கோலாலம்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இன்வெஸ்ட்மலேசியா 2018 என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நஜிப், 1எம்டிபி சரிவை சரி செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டினார்.

மேலும், 1எம்டிபி விவகாரத்தை மேலும் கிளற விரும்பவில்லை என்று கூறிய நஜிப், ஆனால் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்த கவலையும் தனக்கு இருப்பதை ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அதனால் தான் 1எம்டிபி விவகாரத்தில் தீவிர விசாரணைக்கு தான் உத்தரவிட்டதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசியா ரிங்கிட் இனியொரு முறை சரிவைச் சந்திக்காது என்றும், மலேசிய பொருளாதாரம் வலுவடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று முதலீட்டாளர்களுக்கு நஜிப் நம்பிக்கையளித்தார்.