Home உலகம் இந்தோனிசியாவில் நிலநடுக்கம்: பீதியில் அலுவலகங்களை விட்டு வீதிக்கு வந்த மக்கள்!

இந்தோனிசியாவில் நிலநடுக்கம்: பீதியில் அலுவலகங்களை விட்டு வீதிக்கு வந்த மக்கள்!

997
0
SHARE
Ad

Indonesia quakeஜகார்த்தா – இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால், அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த பலர், அங்கிருந்து உடனடியாக வெளியேறி வீதிக்கு வந்தனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, ஜாவா தீவில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 கிலோமிட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக ஆய்வு மையம் கூறுகின்றது.
ஜகார்த்தா, நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.