Home Featured தமிழ் நாடு ராம்குமார் சட்டையில் இருந்தது சுவாதியின் இரத்தம் தான் – பரிசோதனையில் உறுதியானது!

ராம்குமார் சட்டையில் இருந்தது சுவாதியின் இரத்தம் தான் – பரிசோதனையில் உறுதியானது!

589
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererகோலாலம்பூர் – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சம்பவத்தன்று பயன்படுத்திய சட்டையில் இருந்தது சுவாதியின் இரத்தம் தான் என்பது மரபியல் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

ராம்குமார் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்தச் சட்டை, ஐதராபாத்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் மரபியல் சோதனைக்காக அனுப்பப்பட்டது.

அதன் முடிவில் ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த இரத்தம் சுவாதியின் இரத்தம் தான் என்பது உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆய்வறிக்கை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.