கொழும்பு, மார்ச்.19- இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே தனது பெயரில் புதிய சர்வதேச விமான நிலையத்தை நேற்று துவக்கி வைத்தார்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்க்ஷே தனது சொந்த ஊரான, தலைநகர் கொழும்பு நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஹம்பந்த்தோடா மாவட்டத்தில் மத்தளா நகரில், சீனா உதவியுடன் 2009-ம் ஆண்டு 209 மில்லியன் டாலர் செலவில் சர்வதேச விமான நிலையம் கட்ட திட்டமிட்டிருந்தார்.
இதற்கான பணிகள் நிறைவடைந்தன. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. இந்த விமானநிலையத்திற்கு ராஜபக்க்ஷே சர்வதேச விமான நிலையம் (எம்.ஆர்.ஐ.ஏ) என பெயரிடப்பட்டுள்ளது.
இதனை நேற்று திறந்து வைத்தார். நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.